மாநில ஹாக்கி போட்டி சிவகங்கை 2ம் இடம்
சிவகங்கை : தேனியில் நடந்த மாநில ஹாக்கி போட்டியில் சிவகங்கை புனித ஜோசப் பள்ளி மாணவர்கள் இரண்டாம் இடம் பிடித்தனர்.தேனியில் மாநில அளவிலான குடியரசு தின விழா குழு விளையாட்டு போட்டிகள் நடந்தது. சிவகங்கை புனித ஜோசப் மேல்நிலை பள்ளி மாணவர்கள் 14 வயதிற்கு உட்பட்டோருக்கான ஹாக்கி போட்டியில் பங்கேற்றனர். இப்போட்டியில் மாநில அளவில் 40 அணிகள் பங்கேற்றன. இதில், சிவகங்கை புனித ஜோசப் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்தனர். இம்மாணவர்களை பள்ளி தாளாளர், தலைமை ஆசிரியை, ஹாக்கி சங்க நிர்வாகிகள், ஆசிரியர்கள் பாராட்டினர்.