மேலும் செய்திகள்
சிவகங்கை: கிறிஸ்துமஸ் விழா
53 minutes ago
விடுதி அருகே எரிந்த வேன்
54 minutes ago
தினமலர் பட்டம் வினாடி வினா போட்டி
54 minutes ago
பழநி பாதயாத்திரையில் வெளிநாடு நகரத்தார்
55 minutes ago
சிவகங்கையில் மறியல்
56 minutes ago
சிவகங்கை: சிவகங்கை- தொண்டி மேம்பாலத்தில் மின்விளக்கு பராமரிப்பு, சுரங்கப்பாதையில் மழை நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது நகராட்சியின் முழு பொறுப்பு என தேசிய நெடுஞ்சாலைத்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.சிவகங்கையில் நகராட்சி அருகே கட்டப்பட்டுள்ள தொண்டி ரயில்வே மேம்பாலத்தில் வாகனங்கள் செல்ல சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதன் வழியாக சிவகங்கையில் இருந்து ஆயுதப்படை, ரோஸ்நகர், கேந்திரிய வித்யாலயா பள்ளி, பனங்காடி, வல்லனி பகுதிகளுக்கு வாகனங்கள் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால்,இந்த சுரங்கப்பாதைக்குள் மழை நீர் தேங்காத வகையில் கட்டப்படவில்லை. சிறு மழைக்கு கூட சுரங்க பாதைக்குள் மழைநீர் தேங்கிவிடுகிறது. சிறு மழை பெய்தால் கூட சுரங்கப்பாதையில் செல்ல முடியாத நிலை சில ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வு காணாமல், தேசிய நெடுஞ்சாலைத்துறையை கேட்டால், நகராட்சி, நகராட்சியை கேட்டால் ரயில்வே நிர்வாகம் தான் பொறுப்பு என அதிகாரிகள் தங்கள் பொறுப்பை தட்டிக்கழிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர்.இது குறித்து தொடர்ந்து சர்ச்சை எழுந்து வந்ததால், சிவகங்கை கலெக்டர் ஆஷா அஜித் நகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறையினரிடம் விளக்கம் கேட்டுள்ளார். நகராட்சிக்கு தான் முழு பொறுப்பு
சிவகங்கை, தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் பாலசிங்கார வேலன் கலெக்டருக்கு அளித்த பதிலில், மேம்பாலத்தில் உள்ள 40 மின் கம்பங்களில் 80, சுரங்கப்பாதையில் 2 எல்.இ.டி.,விளக்குகள், 2 எச்.பி.,மின்மோட்டார் ஆகியவற்றை 2021 அக்.,22 முதல் நகராட்சியே பராமரிப்பதாக பொறுப்பேற்று கொண்டது. மழை நீர் சுரங்கப்பாதைக்குள் புகாத வகையிலும், பாலத்தில் மின்விளக்கு முறையாக பராமரிப்பதற்கு நகராட்சி தான் பொறுப்பேற்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
53 minutes ago
54 minutes ago
54 minutes ago
55 minutes ago
56 minutes ago