உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திடக்கழிவு மேலாண்மை திட்டம்; வீணாகி கிடக்கும் குப்பை தொட்டி

திடக்கழிவு மேலாண்மை திட்டம்; வீணாகி கிடக்கும் குப்பை தொட்டி

காரைக்குடி: திடக்கழிவு மேலாண்மை திட்டத்தால் பேரூராட்சி மற்றும் ஊராட்சிகளில், பல லட்சம் மதிப்பில் உருவான குப்பை தொட்டிகள் மறுபயன்பாடின்றி வீணாகி வருகிறது.நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் சேகரம் செய்யப்படும் குப்பைகளை ரோட்டில் வீசுவதை தடுக்க குப்பைத் தொட்டிகள் அமைத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தினர். குப்பைகள் எடுக்கப்படாத நாட்களில் தொட்டிகளில் குப்பைகள் நிரம்பி வழிவதோடு சாலைகளும் குப்பை காடாக காட்சி அளித்தது. மேலும் குப்பைகளை தரம் பிரிக்க முடியாததாலும், குப்பைகளை கொட்ட போதிய இடமின்றி பல்வேறு பிரச்சனை எழுந்தது. இதனை தடுக்க திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் தூய்மை பணியாளர்கள் வீடு வீடாகச் சென்று குப்பைகளை சேகரிக்கும் திட்டம் தொடங்கப்பட்டது. பொதுமக்கள் மக்கும், மக்காத குப்பை என தனித்தனியாக பிரித்து வழங்க அறிவுறுத்தப்பட்டன. இவ்வாறு மக்கும், மக்காத குப்பை என தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரங்கள் தயாரிக்கும் பணியும் நடந்து வருகிறது.இந்நிலையில் பல லட்சம் மதிப்பீட்டில் தூய்மை பணிக்காக வாங்கப்பட்ட குப்பைத் தொட்டிகள் பலவும் பயன்பாடின்றி குவியல் குவியலாக கிடக்கிறது. மழை மற்றும் வெயிலில் வீணாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ