உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

திருநங்கைகளுக்கு சிறப்பு முகாம்

சிவகங்கை: சிவகங்கையில் நாளை திருநங்கைகளுக்கான சிறப்பு முகாம் நடைபெறும் என கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:சமூகத்தில் விளிம்பு நிலையில் உள்ள திருநங்கைகளுக்கு ஒரே இடத்தில், ஒரே நாளில் நலத்திட்ட உதவி வழங்க நாளை (ஜூன் 21) கலெக்டர் அலுவலகத்தில் ஒரு நாள் சிறப்பு முகாம் நடைபெறும். இதில் மாவட்டத்தை சேர்ந்த திருநங்கைகள் அடையாள அட்டை, ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, மருத்துவ காப்பீடு திட்ட அட்டை, ஆயுஷ்மான் பாரத் அட்டை மற்றும் உரிய சான்றுகளுடன் பங்கேற்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ