விளையாட்டு அரங்கம் திறப்பு
சிவகங்கை : சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை குழந்தைகள் வார்டில் சிகிச்சை பெறும் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் சிகிச்சை பெற ஏதுவாக விளையாட்டு அரங்கம் திறக்கும் நிகழ்ச்சி நடந்தது. துறை தலைவர் டாக்டர் சிவக்குமார் தலைமை வகித்தார்.முதல்வர் சத்தியபாமா அரங்கை திறந்து வைத்தார். டாக்டர்கள் வனிதா, பாலசுப்பிரமணியன், ராஜ்குமார், நிலைய டாக்டர்கள் மகேந்திரன், முகமது ரபி கலந்து கொண்டனர்.