உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஊரணியில் குப்பை கொட்டுவதால் அவதி

ஊரணியில் குப்பை கொட்டுவதால் அவதி

சாலைக்கிராமம், ; சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஊரணியில் கழிவு,குப்பையை கொட்டுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.சாலைக்கிராமம் பஸ் ஸ்டாண்ட் அருகே பெரிய ஊரணி உள்ளது. இந்த ஊரணியில் சாலைக்கிராமம் ஊராட்சி மூலம் 3 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.சாலைக்கிராமம் சுற்று வட்டார பகுதிகளில் சேகரமாகும் குப்பைகளையும் மற்றும் கழிவுகளையும் ஊரணியில் கொட்டி வருவதால் கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதாரக்கேடு ஏற்படும் நிலை உள்ளது. மாவட்ட நிர்வாகம் இந்த ஊரணியில் குப்பை,கழிவை கொட்டுவதற்கு பதிலாக மாற்று இடத்தை தேர்வு செய்து அதில் குப்பையை கொட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை