உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சுவர்ண பைரவர் கோயில் கும்பாபிஷேகம்

சுவர்ண பைரவர் கோயில் கும்பாபிஷேகம்

தேவகோட்டை: தேவகோட்டை அருகே வெளிமுத்தி விலக்கு பட்டுக்குருக்கள் நகரில் உள்ள பிரத்யங்கிரா தேவி கோயில் வளாகத்தில் அட்சயா மகா கணபதி, வராஹி அம்மன், அனுகிரஹ பாபா விக்ரகங்கள் பிரதிஷ்டை செய்து கோயில் விமானம் கட்டப்பட்டது.மேலும் தென் பகுதியிலேயே உயரமாக 16 அடி உயரம் கொண்ட சுவர்ண பைரவர் விக்ரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. திருப்பணி முடிந்து, கும்பாபிஷேகம் விழா 5ந்தேதி கணபதி ஹோமத்துடன் தொடங்கி, சுமங்கலி பூஜைகள் நடத்தினர்.சிவாச்சாரியார்கள் யாகசாலை பூஜைகளை நடத்தினர். வள்ளீஸ்வர குருக்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகத்தை நடத்தினார்.சேவுகன் அண்ணாமலை கல்லூரி தலைவர் லட்சுமணன், நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம், ஒன்றிய தலைவர் பிர்லா கணேசன், குமார், ராஜேந்திரன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ