உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / தமிழ் கையெழுத்து போட்டி

தமிழ் கையெழுத்து போட்டி

சிவகங்கை: சிவகங்கை மாவட்ட அரசு பள்ளிகளில் 6 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான தமிழ் கையெழுத்துப் போட்டி மருதுபாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து துவக்கி வைத்தார். போட்டியில் ஒவ்வொரு பள்ளியிலும் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் ஒருவர் வீதம் 105 மாணவர்கள் பங்கேற்றனர். இதில் முதல் 3 இடங்களில் வெற்றி பெறும் 6 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.3000, இரண்டாம்பரிசு ரூ.2000, மூன்றாம்பரிசு ரூ.1000,10 முதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு முறையே ரூ.4000, ரூ.3000, ரூ.2000ம் ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை