மேலும் செய்திகள்
நாளை (ஆக.7) மின்தடை
06-Aug-2024
சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் பிரவலுார் கிராமத்தை சேர்ந்தவர் தங்கவேலு மகன் ராஜேந்திரன் 37. இவர் வெளிநாடு செல்வதற்காக ஒக்கூர் முனியசாமியிடம் 50 ஆயிரம் கொடுத்தார்.ஆனால் வெளிநாடு அனுப்பாமல் முனியசாமி காலம் கடத்தியுள்ளார். ராஜேந்திரன் தனது பணத்தை திரும்ப தரும்படி கேட்டுள்ளார். அதற்கு ராஜேந்திரனை ஜாதியை கூறி திட்டி அசிங்கமாக பேசி தாக்கியுள்ளார். ராஜேந்திரன் மதகுபட்டி போலீசில் புகார் அளித்தார். மதகுபட்டி போலீசார் முனியசாமியை கைது செய்தனர்.
06-Aug-2024