உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வழி தவறி வந்த மான் மீட்ட கிராம மக்கள்

வழி தவறி வந்த மான் மீட்ட கிராம மக்கள்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே சொக்கநாதிருப்பு கிராமத்திற்கு வழிதவறி வந்த மானை பொதுமக்கள் மீட்டு பாதுகாத்தனர். சொக்கநாதிருப்பு கிராமத்தை ஒட்டி பிரமனுார் கண்மாய் அமைந்துள்ளது. கண்மாயினுள் உள்ள கருவேல மர காட்டினுள் புள்ளிமான்கள், முயல்கள், உடும்பு உள்ளிட்ட ஏராளமான விலங்குகள் வசித்து வருகின்றன. கோடை காலத்தில் தண்ணீர் குடிக்க மான்கள் உள்ளிட்டவை கிராமத்திற்குள் வருவது வழக்கம். நேற்று அதிகாலையில் தண்ணீர் குடிக்க வந்த இரண்டரை வயது உள்ள ஆண் புள்ளி மான் வழிதவறி கிராமத்திற்கு வந்ததை அடுத்து தெரு நாய்கள் மானை விரட்டின. இதனை பார்த்த கிராமமக்கள் நாய்களை விரட்டி விட்டு புள்ளி மானை மீட்டு உணவு, தண்ணீர் வழங்கி காட்டுப் பகுதியில் விட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை