உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / எக்கோ பரிசோதனைக்கு டாக்டர் இல்லை

எக்கோ பரிசோதனைக்கு டாக்டர் இல்லை

சிவகங்கை, : சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் எக்கோ பரிசோதனை செய்வதற்கு பல மாதங்களாக டாக்டர் இல்லை. இதய நோய் பாதித்தவர்கள், கர்ப்பிணிகள் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்படுகின்றனர்.சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதமாக எக்கோ பரிசோதனை செய்வதற்கு டாக்டர் இல்லை. இங்கிருந்த டாக்டர் பணி மாறுதலில் மதுரை அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதயம் சம்பந்தமான சிகிச்சைபெற வருபவர்கள்டாக்டர் இல்லாததால் மதுரைக்கு அனுப்பப்பட்டு வருகின்றனர். இது தவிர மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் கர்ப்பிணிகளுக்கு பிரசவத்திற்கு முன்பு ஏழு மாதத்தில்எக்கோ பரிசோதனை செய்து அவசியம். மாவட்டத்தில் உள்ள 52 ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட தாலுகா மருத்துவமனைகளில் இருந்து கர்ப்பிணிகள் எக்கோ பரிசோதனைக்காக சிவகங்கை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு தான் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இங்கு எக்கோ பரிசோதனைக்கு டாக்டர் இல்லாததால் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டிய நிலை உள்ளது. கடந்த மாதத்தில் மட்டும் 10க்கும் அதிகமான கர்ப்பிணிகள் மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பப்பட்டுள்ளனர். மருத்துவக்கல்லுாரி இருந்தும் பல்வேறு சிகிச்சைக்காக மதுரை செல்ல வேண்டியநிலை சிவகங்கை மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.மருத்துவக் கண்காணிப்பாளர் சிவக்குமார் கூறுகையில், எக்கோ பரிசோதனைக்கு இருதயவியல் டாக்டர் பணியிடம் காலியாக உள்ளது என அரசுக்கு கடிதம் வைத்துஉள்ளோம். அரசு தான் பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை