மேலும் செய்திகள்
வீட்டுக்குள் புகுந்த பாம்பு
22-Feb-2025
67 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
21-Feb-2025
சிங்கம்புணரி: வெயிலைத் தேடி தமிழ்நாட்டுக்கு சுற்றுலா வந்த இங்கிலாந்து நாட்டினர் சிங்கம்புணரி வழியாக சென்றனர்.இங்கிலாந்து நாட்டில் இருந்து 25க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தமிழகத்துக்கு சுற்றுலா வந்துள்ளனர். கேரளாவில் இருந்து சைக்கிளில் புறப்பட்டவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றி வருகின்றனர். நேற்று சிங்கம்புணரி, பிள்ளையார்பட்டி பகுதியில் உள்ள கோயில்களுக்கு சென்றனர்.அவர்கள் தெரிவித்ததாவது: இந்த காலகட்டத்தில் தங்கள் நாட்டில் வெயில் குறைவாகவே இருக்கும். உடலுக்கு தேவையான வெயிலின் முழுப் பயனை அனுபவிக்க ஆண்டுதோறும் இந்தியாவுக்கு சுற்றுலா வருகிறோம். தமிழகத்தில் புராதன கலை அம்சம் கொண்ட கோயில்கள் அதிகம் உள்ளது. அனைத்தையும் பார்க்க பிரமிப்பாக உள்ளது. மக்களின் கலாசார பண்பாடு உலகத்திற்கு முன் உதாரணமாக உள்ளது என்று தெரிவித்தனர். தொடர்ந்து மதுரை புறப்பட்டு சென்றனர்.
22-Feb-2025
21-Feb-2025