மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
17 hour(s) ago
பயிற்சி முகாம்
17 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
17 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
17 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
17 hour(s) ago
திருப்புவனம் : திருப்புவனத்தில் நேற்று காலை போக்குவரத்து நெரிசல் காரணமாக வாகன ஓட்டிகள் வெயிலில் நீண்ட நேரம் தவித்தனர்.திருப்புவனம் வழியாக மதுரை, பரமக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகின்றன. திருப்புவனம் வைகை கரையில் இறந்த முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் வழங்கி வழிபட்டால் அவர்கள் ஆத்மா சாந்தியடையும் என்பது நம்பிக்கை எனவே தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருப்புவனம் வந்து செல்கின்றனர்.இவர்களுக்காக திருப்புவனத்தில் ரோட்டை ஒட்டி பலரும் தேங்காய், பழம், பூ, காய்கறிகள் விற்பனை செய்கின்றனர். ரோடு சுருங்கியதால் தினசரி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.நேற்று காலை 11:00 மணிக்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருபுறமும் நீண்ட துாரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. எந்த பக்கமும் வாகனம் நகர முடியாததாலும் வெயிலின் தாக்கமும் அதிகம் இருந்ததாலும் வாகனங்களில் வந்தவர்கள் தவிப்பிற்குள்ளாகினர்.போக்குவரத்து போலீசார் இருந்தும் வாகனங்களில் வந்தவர்கள் விதிகளை மீறி குறுக்கும் நெடுக்குமாக சென்றதால் போக்குவரத்தை சரி செய்யவே முடியவில்லை. மாவட்ட நிர்வாகம் திருப்புவனத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை நிரந்தரமாக சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago
17 hour(s) ago