உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மஸ்ட் ஒருவருடமாக பொருட்களை திருடி விற்ற இருவர் கைது

மஸ்ட் ஒருவருடமாக பொருட்களை திருடி விற்ற இருவர் கைது

காரைக்குடி, : காரைக்குடி செக்காலையில் தியேட்டர் உள்ளது.இதன் அருகிலேயே தியேட்டர் உரிமையாளர் பாண்டியனுக்கு சொந்தமான வீடு உள்ளது. பழமையான இந்த வீடு கடந்த சில மாதங்களாக பயன்பாடு இன்றி மூடி கிடந்தது.வீட்டின் உரிமையாளர் வீட்டை வந்து பார்த்தபோது, வீட்டிலிருந்த ஏ.சி., பிரிட்ஜ் உட்பட கேமராக்கள் கலைப்பொருட்கள் திருடு போயிருந்தது. இது குறித்து காரைக்குடி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணை செய்ததில் கழனிவாசல் புது ரோட்டை சேர்ந்த நாகராஜ் 19, ஜீவா நகரைச் சேர்ந்த அபிஷேக் 23 இருவர் திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்களது வீட்டை சோதனை செய்த போது, வீட்டிலிருந்த காமிரா உட்பட பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பூட்டிய இந்த வீட்டிலிருந்து ஒவ்வொரு பொருட்களாக திருடி விற்பனை செய்தது தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ