மேலும் செய்திகள்
போடி அருகே டூவீலர் திருட்டு
16-Feb-2025
சிவகங்கை; சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக டூவீலர் திருட்டு அதிகரித்து வருகிறது.காளையார்கோவில் அருகே காயாஓடை அருள்சூசை மகன் அமிர்தனயாகம் 21. இவர் காளையார்கோவில் மேல்நிலை பள்ளி அருகே டூவீலரை நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்த போது டூவீலர் திருடுபோனது தெரியவந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு காரைக்குடி லக்ஷ்மி நகர் மதியழகன் மகன் அஜய்கார்த்திக் 23. இவர் காரைக்குடி சாமியார்தோட்டம் பகுதி கடை அருகே டூவீலரை நிறுத்தியுள்ளார். யாரோ திருடி சென்றனர். மானாமதுரை சிப்காட் ஆறுமுகம் மகன் மகாலிங்கம் 57. இவர் மானாமதுரை மார்க்கெட் பகுதியில் உள்ள கோவில் அருகே டூவீலரை நிறுத்திவிட்டு மார்க்கெட்டிற்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது டூவீலர் திருடுபோய் உள்ளது. திருப்புவனம் டி.பழையூர் பகுதியை சேர்ந்தவர் அம்பிகா 40. இவர் டூவீலரை வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தார். அவரது டூவீலரையும் திருடி சென்றுள்ளனர்.
16-Feb-2025