மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
15 hour(s) ago
பயிற்சி முகாம்
15 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
15 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
15 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
15 hour(s) ago
காரைக்குடி: சாக்கோட்டை வட்டார துணை சுகாதார நிலையங்களை முறையாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில் அனைவருக்கும் சுகாதாரம் என்ற இலக்கின் அடிப்படையில் ஆரம்ப சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. 25 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட ஒரு பகுதிக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையமும், 5 ஆயிரம் மக்களுக்கு ஒரு துணை சுகாதார நிலையம் தொடங்கப்பட்டது. ஆரம்ப சுகாதார நிலையத்தின் கீழ் 5 துணை சுகாதார நிலையங்கள் செயல்படுகிறது. இவற்றில் டாக்டர்கள், செவிலியர், மருத்துவமனை பணியாளர், ஆய்வக உதவியாளர், களப்பணியாளர்கள், கிராமப்புற சுகாதார செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் புள்ளியியல் நிபுணர், வட்டார சுகாதாரப் பயிற்சியாளர் பணியாற்றுவர். சாக்கோட்டை வட்டாரத்தில் புதுவயல் பீர்க்கலைக்காடு, ஓ. சிறுவயல், கோட்டையூர் ஆகிய 4 ஆரம்ப சுகாதார நிலையங்களும், 24 துணை சுகாதார நிலையங்கள் செயல்படுகின்றன. இதில் துணை சுகாதார நிலைய கட்டடம் பலவும் பராமரிப்பின்றி உள்ளது.பல சுகாதார நிலையங்கள் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. மருத்துவ அதிகாரிகள் கூறுகையில்: பராமரிப்பில்லாத கட்டடம் குறித்து தற்போது தரவுகள் கேட்கப்பட்டுள்ளது. தரவுகளின் அடிப்படையில் பராமரிப்பு செய்யப்படும். பழைய கட்டடங்கள் அகற்றப்பட்டு புதிய கட்டடங்கள் கட்டுவதற்கு, உரிய அறிவிப்பு வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago
15 hour(s) ago