உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பராமரிப்பில்லாத கண்மாய் மடைகள்

பராமரிப்பில்லாத கண்மாய் மடைகள்

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் மடைகள் மராமத்து செய்யப்படாமல் அவற்றில் மரங்கள் முளைத்து பாழாகி வருகிறது. இத்தாலுகாவில் பொதுப்பணித்துறை ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் 2000க்கும் மேற்பட்ட கண்மாய்கள் உள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்பு சில கண்மாய்களில் மராமத்து பணி நடைபெற்ற நிலையில் 30 ஆண்டுகளாக சீரமைக்கப்படாத கண்மாய்கள், மடைகள் ஏராளமாக உள்ளன. இவற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதும் திறக்கப்படுவதும் பாதிக்கப்படுகிறது. குறிப்பாக எஸ்.வையாபுரிபட்டி ஊராட்சி சிறுமருதுார் கண்மாய் மடையில் மரம் முளைத்து இடிந்து வருகிறது. மழைக்காலம் துவங்குவதற்கு முன் அனைத்து மடைகளையும் சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை