மேலும் செய்திகள்
பெட்ரோல் குடித்து ஒருவர் பலி
11 hour(s) ago
பயிற்சி முகாம்
11 hour(s) ago
சாய்பாபா கோயிலில் சிறப்பு பூஜை
11 hour(s) ago
தேவகோட்டையில் அம்பு எய்தல் வைபவம்
11 hour(s) ago
சிலை பிரதிஷ்டை
11 hour(s) ago
மானாமதுரை : மானாமதுரை நிரதலமுடைய அய்யனார், சோணையா சுவாமி கோயிலில் வைகாசி உற்ஸவ பொங்கல் விழாவில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.மானாமதுரை ஐந்து கரை குலாலர்கள் சமூக சங்கத்தின் சார்பில் 2 ஆண்டுக்கு ஒரு முறை வைகாசி உற்ஸவ பொங்கல் விழா நடைபெறுவது வழக்கம். பொங்கல் விழா துவங்கப்பட்டதை யடுத்து ஏராளமானோர் காப்பு கட்டி விரதமிருந்தனர். நேற்று ஏராளமானோர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் வைப்பதற்கான பொருட்களை ஓலைப் பெட்டிகளில் வைத்து கோயிலுக்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று பொங்கல் வைத்தனர். பூஜாரிகள்,சாமியாடிகள் தாயமங்கலம் ரோட்டில் உள்ள அலங்கார குளத்திற்கு சென்று கரகம் வளர்த்து பூஜை பெட்டிகளுடன் ஊர்வலமாக குலாலர் தெருவில் உள்ள கோயில் வீடுகளுக்கு சென்று வழிபட்ட பின்னர் சோணையா கோயில் முன் பூக்குழி இறங்கி தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றினர். விழாவை முன்னிட்டு சுவாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேக, ஆராதனை நடந்தது.
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago
11 hour(s) ago