உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / கைப்பந்து போட்டி மாணவர்கள் தேர்வு

கைப்பந்து போட்டி மாணவர்கள் தேர்வு

தேவகோட்டை: தேசிய அளவிலான கைப்பந்து போட்டி மார்ச் 26ந் தேதி முதல் பீகார் மாநிலம் ஜெகனாபாத்தில் நடைபெற உள்ளது. போட்டியில் பங்கேற்க தமிழக அணிக்கான தேர்வு திண்டுக்கல்லில் நடைபெற்றது.தமிழக ஜூனியர் அணிக்கான தேர்வு நடந்ததில் 91 மாணவர்கள் பங்கேற்றனர். தேவகோட்டை என்.எஸ்.எம்.வி.பி.எஸ். மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர்கள் வீர மணிகண்டன் தமிழக அணியில் விளையாட உள்ளார். இதே பள்ளி பிளஸ் 2 மாணவரான நிஷாந்த் புதுச்சேரி மாநில அணிக்காக விளையாட தேர்வாகி உள்ளார். மாணவர்களை நிர்வாகத்தினர், தலைமை ஆசிரியர் வெங்கடாசலம், உடற்கல்வி இயக்குனர் பூமிநாதன் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ