உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி

ஓட்டுப்பதிவு இயந்திரம் சரிபார்ப்பு பணி

சிவகங்கை : சிவகங்கை தொகுதிக்கு தென்காசியில் இருந்து புதிதாக வந்த 816 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணி கலெக்டர் ஆஷா அஜித் தலைமையில் நடந்தது. சிவகங்கை தொகுதியில் 6 சட்டசபை தொகுதியில் 8 லட்சத்து 2 ஆயிரத்து 283 ஆண், 8 லட்சத்து 31 ஆயிரத்து 511 பெண், இதர பாலினத்தவர் 63 பேர் என 16 லட்சத்து 33 ஆயிரத்து 857 வாக்காளர்கள் உள்ளனர். இத்தொகுதியில் 20 வேட்பாளர் போட்டியிடுகின்றனர். இதற்கு கூடுதலாக தேவைப்படும் 816 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தென்காசி மாவட்டத்தில் இருந்து வரவழைக்கப்பட்டன. இந்த இயந்திரங்கள் முதற்கட்ட சரிபார்ப்பு பணி நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் விஜயகுமார், கலெக்டர் பி.ஏ.,(தேர்தல்) ஜான்சன் சகாயம், தாசில்தார்கள் மேசியாதாஸ், சிவராமன் உட்பட அனைத்து கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை