கண்மாயில் கலக்கும் கழிவு
தேவகோட்டை : தேவகோட்டை அருகே செய்யானேந்தல் கிராமத்தை ஓட்டி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் டோல்கேட் உள்ளது. டோல்கேட் இரு புறமும் இலவச கழிப்பறை உள்ளது.கழிப்பறை செப்டிக் டேங்க் மூடி திறந்து கிடக்கிறது. மழை நீர் கலந்து நிரம்பி இதனை ஒட்டி உள்ள பயன்பாட்டில் உள்ள கண்மாயில் கலக்கிறது. டோல்கேட் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.