அரசு குழந்தைகள் இல்லத்தில் பணி
சிவகங்கை,: காரைக்குடி அருகே ஓ.சிறுவயல் அரசு குழந்தைகள் இல்லத்தில் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் நியமிக்கப்பட உள்ளதாக கலெக்டர் ஆஷா அஜித் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, சிவகங்கை அரசு பெண் குழந்தைகள் இல்லம், ஓ.சிறுவயல் ஆண்கள் குழந்தைகள் இல்லங்களில் மதிப்பூதிய அடிப்படையில் ஆற்றுப்படுத்துநர் பணியிடம் நிரப்ப பட உள்ளது. ஒரு அமர்விற்கு ரூ.1000 வீதம் வழங்கிடும் விதமாக 4 பேர் நியமிக்கப்பட உள்ளனர். இப்பதவிக்கு தகுதியான உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.உரிய கல்வி சான்று நகலுடன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், கலெக்டர் அலுவலகம், சிவகங்கை என்ற முகவரிக்கு மார்ச் 18 க்குள் அனுப்பி வைக்கவும். இதற்கான விண்ணப்பத்தை www.sivagangai.nic.inஎன்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம் என்றார்.