உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரையில் ஜல்லி பரப்பி பல நாளாகியும் பணி துவங்கவில்லை

மானாமதுரையில் ஜல்லி பரப்பி பல நாளாகியும் பணி துவங்கவில்லை

மானாமதுரை:மானாமதுரை, அன்னவாசல் ரோட்டில் ரோடு போடுவதற்காக ஜல்லிக் கற்கள் பரப்பி நீண்ட நாட்களாகியும் ரோடு போடாததால் மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.மானாமதுரையில் இருந்து அன்னவாசல், புதுார்,தேளி,தர்மம் வழியாக நரிக்குடி செல்லும் ரோடு சேதமடைந்து குண்டும்,குழியுமாக இருப்பதால் இந்த ரோட்டை சீரமைக்க வேண்டுமென்று நீண்ட வருடங்களாக இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். தினமலர் நாளிதழிலும் அடிக்கடி செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மானாமதுரையிலிருந்து எஸ்.கரிசல்குளம் வரை ரோட்டை புதுப்பிக்கும் பணி துவங்கியது.மானாமதுரையில் இருந்து அன்னவாசல் புதூர் வரை ஜல்லிகற்கள் பரப்பி 3 வாரங்களுக்கும் மேலாகி விட்டதினால் அப்பகுதியில் உள்ள கிராம மக்கள் இந்த ரோட்டில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்த வழியாக நரிக்குடி செல்லும் அரசு டவுன் பஸ்சும் வராத காரணத்தினால் போக்குவரத்து வசதியின்றி கிராம மக்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை