உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நீதிமன்றத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி

நீதிமன்றத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணி

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் உள்ள காலி பணியிடங்களுக்கு செப்.17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.சிவகங்கை மாவட்டத்தில் குற்ற வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதிடுவதற்கு முழுநேர அரசு வழக்கறிஞர்கள் போல், வழக்கறிஞர் வைத்துக்கொள்வதற்கு வசதி இல்லாத குற்றம் சாட்டப்பட்டவர்களுக்காக வாதிடுவதற்கு முழுநேர வழக்கறிஞர்கள் மற்றும் அலுவலர்கள் ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவிற்கு 2 துணை சட்ட உதவி வழக்கறிஞர்கள், 3 உதவி வழக்கறிஞர்கள், 1 அலுவலக உதவியாளர்/கிளார்க், 2 பியூன் பதவிகள் என 8 பணியிடங்கள் காலியாக உள்ளது.இந்த பதவிகளுக்கான பணியிடங்கள் சிவகங்கை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவால் நேர்முக தேர்வின் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்களை தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகிறது.விண்ணப்பங்களை சிவகங்கை மாவட்ட நீதிமன்ற இணைதள முகவரியான https://sivagangai.dcourts.gov.inஇருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை செப்.17 ஆம் தேதி மாலை 5:00 மணிக்குள் தலைவர் முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சிவகங்கை என்ற முகவரிக்கு பதிவு அஞ்சல் வழியாகவும், https://sivagangai.dcourts.gov.inஎன்ற இணையதள முகவரியிலும் அனுப்பி வைக்கலாம். கடைசி தேதிக்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ