உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

சிவகங்கை : கொல்லங்குடி அருகே ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்தார். 2016 நவ.17ஆம் தேதி சிறுமியை காணவில்லை. சிறுமியின் பெற்றோர் காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சிறுமியை தேடிவந்தனர். சிறுமி வீட்டின் அருகே உள்ள கிணற்றில் பிணமாக கிடந்தார். போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனை செய்தனர்.பிரேத பரிசோதனையில் சிறுமி கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதே கிராமத்தை சேர்ந்த சிவா 30 என்பவர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. போலீசார் சிவாவை கைது செய்தனர். இந்த வழக்கு சிவகங்கை போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை நீதிபதி கோகுல் முருகன் விசாரித்தார். குற்றம் சாட்டப்பட்ட சிவாவிற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ