உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / வேட்டங்குடியில் இருந்து தாயகத்திற்கு பறக்க துவங்கிய 11,200 பறவைகள்

வேட்டங்குடியில் இருந்து தாயகத்திற்கு பறக்க துவங்கிய 11,200 பறவைகள்

சிவகங்கை:சிவகங்கை மாவட்டம் வேட்டங்குடி சரணாலயத்திற்கு வந்து இனப்பெருக்கத்திற்கு பின் 11,200 பறவைகள் தங்களது ' தாயகம்' நோக்கி புறப்பட்டன.சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே வனத்துறையின் கீழ் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் வடகிழக்கு பருவ மழை காலங்களில் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, வடகிழக்கு ஆசிய நாடுகளில் இருந்து இனப்பெருக்கத்திற்காக பறவைகள் வரும். இனப்பெருக்கம் முடிந்து ஜன., மற்றும் பிப்., மாதங்களில் தங்களது சொந்த நாட்டிற்கு குஞ்சுகளுடன் சென்று விடும்.2024 அக்., மாதத்தில்மேலடுக்கு சுழற்சி, அதனை தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவ மழையால் வேட்டங்குடி, சின்ன, பெரிய கொள்ளுக்குடிபட்டி கண்மாய்களில் நீர் நிரம்பியது. தொடர்ந்து பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் சரணாலய பகுதிகளில் காணப்பட்டது.இனப்பெருக்கத்திற்கு ஏதுவான இடமாக பறவைகளுக்கு இச்சரணாலயம் அமைந்தது. அங்குள்ள கருவேல மரங்களில் கூடுகள் கட்டி, இனப்பெருக்கம் செய்தன. பல்வேறு நாடுகளில் இருந்து, இனப்பெருக்கத்திற்காக 62 வகைகளை சேர்ந்த 6000 வெளிநாட்டு பறவைகள் வேட்டங்குடிக்கு வந்திருந்தன.

11,200 பறவைகள் கணக்கெடுப்பு

இனப்பெருக்கத்திற்குபின் ஜன.,28ல் சரணாலயத்தில் உள்ள பறவைகள் குறித்து மதுரை, திருப்புத்துார், கல்லல் கல்லுாரி மாணவர்கள் கணக்கெடுப்பு நடத்தினர். பறவைகள், அதன் குஞ்சுகள் (பறவைக்கு தலா 3 முதல் 4 குஞ்சுகள்) என 11,200 வரை இம்மூன்று கண்மாய்களில் இருப்பது தெரிந்தது. அவை சொந்த நாடுகளுக்கு செல்ல துவங்கியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ