/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 குழந்தைகள் சுகப்பிரசவம்
சிவகங்கை அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 12 குழந்தைகள் சுகப்பிரசவம்
சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ஆப்பரேஷன் இல்லாமல் 12 குழந்தைகள் சுகப் பிரசவமாக பிறந்துள்ளது. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு 200 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில் கடந்த ஆண்டு மட்டும் 4460 பிரசவம் நடந்துள்ளது. இதில் 4553 குழந்தைகள் பிறந்துள்ளன. தினசரி சராசரியாக 10 முதல் 20 குழந்தைகள் பிறக்கின்றன. இதில் சுகப்பிரசவம் மற்றும் சிசேரி யனும் இருக்கும். நேற்று முன்தினம் மட்டும் ஒரே நாளில் ஆப்பரேஷன் இல்லாமல் 12 குழந்தைகள் பிறந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரே நாளில் சிசேரியனே இல்லாமல் சுகப்பிரசவத்தில் 12 குழந்தைகள் பிறந்தது இதுவே முதல் முறை என்கின்றனர் நிர்வாகத்தினர்.