உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / பணிநிரந்தரம் கோரி மறியல் மின்ஊழியர் 130 பேர் கைது 

பணிநிரந்தரம் கோரி மறியல் மின்ஊழியர் 130 பேர் கைது 

சிவகங்கை ': மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியர்களை பணிநிரந்தரம் செய்ய வலியுறுத்தி சிவகங்கையில் மறியலில் ஈடுபட்ட மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பை சேர்ந்த 130 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழக மின்வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை கண்டறிந்து அவர்களுக்கு தினக்கூலி வழங்க வேண்டும். அரசாணை 950 படி தடை செய்யப்பட்ட 19 இடங்களில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களை நிரந்தரம் செய்வோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன் மின் ஊழியர் மத்திய கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு கூட்டமைப்பு மாநில செயலாளர் உமாநாத் தலைமை வகித்தார். திட்ட செயலாளர் சுப்புராம் முன்னிலை வகித்தார். திட்ட தலைவர் மோகனசுந்தரம், துணை தலைவர் கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட மின் ஒப்பந்த ஊழியர்கள் 130 பேரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ