உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / சிங்கம்புணரியில் ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரியில் ஆசிரியர் வீட்டில் 15 பவுன் நகை, பணம் திருட்டு

சிங்கம்புணரி:சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி நாடார்பேட்டை தெருவை சேர்ந்தவர் சரவணன் 55, அரசு பள்ளி ஆசிரியர். இவரது மனைவி நிர்மலாதேவி அரசுப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணிபுரிகிறார். ஜூலை 4 ஆம் தேதி இரவு குடும்பத்தினர் அனைவரும் வீட்டின் கதவை பூட்டி துாங்கினர்.காலையில் எழுந்து பார்த்தபோது பின்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு அறைகளில் பீரோவில் இருந்த 15 பவுன் நகை, ரூ.14 ஆயிரம் திருடு போனது தெரிந்தது.நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் துாங்கிக் கொண்டிருந்தவர்கள் முகத்தில் மயக்க மருந்து ஸ்பிரே செய்து விட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.சரவணன் அளித்த புகாரில் சிங்கம்புணரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !