உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / 1847 போலீசார் டிரான்ஸ்பர் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நடவடிக்கை 

1847 போலீசார் டிரான்ஸ்பர் டி.ஜி.பி., சங்கர் ஜிவால் நடவடிக்கை 

சிவகங்கை: தமிழகத்தில் சிறப்பு எஸ்.ஐ., கிரேடு 1, 2 போலீசார் 1,847 பேருக்கு டிரான்ஸ்பர் வழங்கி டி.ஜி.பி., சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.எம்.பி., தேர்தலை முன்னிட்டு ஒரே இடத்தில் 3 ஆண்டிற்கு மேல் பணிபுரிந்த பிற துறை அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் வலியுறுத்தியுள்ளது. அந்தந்த மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,க்கள் அந்தந்த துறை அலுவலர்கள், போலீஸ் அதிகாரிகள், போலீசார்களுக்கு பணியிட மாற்றம் வழங்கி வருகின்றனர்.தமிழக அளவில் சிறப்பு எஸ்.ஐ., கிரேடு 1, 2 போலீசார், மகளிர் போலீசார் என 1,847 பேருக்கு 'டிரான்ஸ்பர்' வழங்கி டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.பெரும்பாலான போலீசார் சென்னை, கோயம்புத்துார் போன்ற பெருநகரங்களை ஒட்டியுள்ள பகுதிகளுக்கே டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் வீட்டு வாடகைபடி உள்ளிட்ட சலுகைகள் உயரும் என்பதற்காக ஆர்வமுடன் டிரான்ஸ்பர் ஆகி சென்றுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ