உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / ஆன்லைனில் 2 பேரிடம் ரூ.2 லட்சம் மோசடி

ஆன்லைனில் 2 பேரிடம் ரூ.2 லட்சம் மோசடி

சிவகங்கை:சிவகங்கையில் ஆன்லைனில் இருவரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்தவர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் வசந்தன் 32. இவரது வாட்ஸ் ஆப் எண்ணிற்கு செப்., 1 காலை 9:00 மணிக்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அவரது இருசக்கர வாகனத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக குறிப்பிட்டிருந்ததால் அதிலிருந்த லிங்கை கிளிக் செய்தார். அதன் பிறகு அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.85 ஆயிரம் திருடப்பட்டது. இழந்த இப்பணத்தை மீட்டு தருமாறு வசந்தன் சிவகங்கை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். சிங்கம்புணரி அருகேவுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணின் வங்கி கணக்கில் இருந்து செப்.,14ல் 18 தவணைகளாக ரூ.78 ஆயிரத்து 892, செப்., 15ல் 7 தவணைகளாக ரூ.35 ஆயிரத்து 359 என மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 251 திருடப்பட்டது. அந்த பெண்ணும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரணை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை