மேலும் செய்திகள்
திருச்சுழியில் முளைக்காத மிளகாய் பயிர்கள்
21-Nov-2024
பழையனுார் : சிவகங்கை மாவட்டம் பழையனுாரில் கடந்த ஐந்து நாட்களாக பெய்த பலத்த மழையால் மிளகாய் செடிகள் தண்ணீரில் மூழ்கி பலத்த நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.பழையனுார், அழகுடையான், அச்சங்குளம், ஆனைக்குளம், சங்கங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் இந்தாண்டு 200 ஏக்கரில் சம்பா மிளகாய் பயிரிடப்பட்டுள்ளது. பழையனுார் கண்மாய் மராமத்து பணி நடைபெறுவதால் வைகை ஆற்றில் இருந்து நீர் வரத்து மிகவும் குறைவாக இருக்கும் என்பதால் நெல் பயிரிடும் பெரும்பாலான விவசாயிகள் மிளகாய் பயிரிட்டிருந்தனர். திருப்புவனம் தாலுகாவில் ஐந்து நாட்களாக மழை பெய்த வண்ணம் இருந்தது. பழையனுாரில் சாகுபடி செய்திருந்த மிளகாய் பயிர் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். விவசாயி ராஜசேகரன் கூறுகையில்: நடவு செய்யப்பட்ட மிளகாய் செடி தற்போது பூ பூக்கும் பருவத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது.தண்ணீர் வெளியேறுவதற்கு வழியில்லாததால் மிளகாய் செடி தண்ணீரில் மூழ்கி பாதிப்புக்குள்ளாகி வருகிறது. உழவு, பார் அமைத்தல், நடவு, உரமிடுதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்துள்ளோம். மழை காரணமாக மிளகாய் பயிர் முற்றிலும் பாதிக்கும் நிலையில் உள்ளது என்றார்.
21-Nov-2024