மேலும் செய்திகள்
தனியார் பாரில் தகராறு இருவருக்கு வெட்டு
22-Jan-2025
மானாமதுரை: மானாமதுரை அருகே மேலப்பிடாவூரில் கல்லுாரி மாணவர் பைக்கில் வந்த போது ஏற்பட்ட தகராறில் அவரை வெட்டியதாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மேலப்பிடாவூர் கிராமத்தைச் சேர்ந்த ராமன் மகன் அய்யாச்சாமி 19, பட்டியலின வகுப்பைச் சேர்ந்த இவர் சிவகங்கை அரசு கலைக்கல்லுாரியில் பி.எஸ்.சி.,3ம் ஆண்டு (கணிதம்)படித்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் கல்லுாரிக்கு சென்று விட்டு தனது பைக்கில் உறவினரான பொன்முத்துவுடன் வந்தார்.மாலை 6:30 மணிக்கு மேலப்பிடாவூரில் உள்ள அவரது வீட்டில் இறக்கிவிட்டு தனது வீட்டிற்கு வரும் வழியில் முதியவர் ஒருவர் குறுக்கே வந்தார். பைக்கில் இருந்து இறங்கி அவரை ஓரமாக செல்லுமாறு கூறி வீட்டு மீண்டும் பைக்கை எடுக்க முயன்ற போது அங்கு வந்த அதே ஊரைச் சேர்ந்த செல்லச்சாமி மகன் வினோத்குமார் 20, அரியசாமி மகன் ஆதீஸ்வரன் 23, மற்றும் வல்லரசு 24, ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஜாதியை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி அய்யாசாமியுடன் தகராறு செய்தனர்.வினோத் என்பவர் அய்யாச்சாமியை வாளால் வெட்டியதில் 2 கைகளிலும் அய்யாச்சாமிக்கு காயம் ஏற்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.அய்யாச்சாமியின் தாய் செல்லம்மாள் மானாமதுரை சிப்காட் போலீசில் கொடுத்த புகாரில் போலீசார் மேற்கண்ட 3 பேரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர்.
22-Jan-2025