மேலும் செய்திகள்
போலீஸ் செய்திகள்..
09-Aug-2025
சிவகங்கை; சி வகங்கை அருகே கண்டாங்கிபட்டியில் ரூ.3 லட்சம் கடனுக்காக கொத்தடிமையாக இருந்து ஆடு மேய்த்த தந்தை, தாய், மகனை போலீசார் மீட்டனர். தஞ்சாவூர் மாவட்டம், ஆவுடையார் கோவில் கணேசன் மகன் நீலகண்டன் 32. இவரது மனைவி முனியம்மாள் 30. ஏழு மாதங்களுக்கு முன் பிழைப்பு தேடி சிவகங்கை அருகே கண்டாங்கிபட்டிக்கு வந்தனர். அங்கு முத்து மகன் தேவராஜன் 50 என்பவருக்கு சொந்தமான ஆடுகளை மேய்க்க ரூ.3 லட்சம் பெற்று, கொத்தடிமையாக இருந்துள்ளனர். ஒரு மாதத்திற்கு முன் தாய், தந்தையை பார்க்க கண்டாங்கிபட்டி வந்த 11 வயது சிறுவனையும் ஆடு மேய்க்கும் தொழி லில் ஈடுபடுத்தினர். வி.ஏ.ஓ., சரண்யா, சிவகங்கை தாலுகா போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் இளையராஜா தலைமையிலான போலீசார் கொத்தடிமையாக இருந்த மூவரையும் மீட்டு மதகுபட்டியில் உள்ள இல்லத்தில் சேர்த்தனர். கொத்தடிமையாக வைத்திருந்ததற்காக கண்டாங்கிபட்டி தேவராஜன் 50, மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
09-Aug-2025