உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை /  வீடு கட்டும் நிதி கையாடல் தாசில்தாருக்கு 3 ஆண்டு

 வீடு கட்டும் நிதி கையாடல் தாசில்தாருக்கு 3 ஆண்டு

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில், 1994 பிப்ரவரியில் இருந்து, 1996 மே வரை உள்ள காலத்தில், இலங்கை தமிழ் அகதிகளுக்கு வீடு கட்டுவதற்கு கடனாக வழங்க, 43 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த தொகையை, 435 இலங்கை அகதிகளுக்கு வழங்கியது போல போலியாக ஆவணங்கள் தயாரித்து, வேறு நபர்கள் பெயரில் பணத்தை கையாடல் செய்து, அரசுக்கு நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டது. இது தொடர்பாக சிவகங்கை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அப்போது இருந்த தேவகோட்டை கோட்டாட்சியர் சையது உசேன், காரைக்குடி தாசில்தார் சர்தார், காரைக்குடி தாலுகா அலுவலக துணை தாசில்தார் இப்ராஹிம் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். சிவகங்கை லஞ்ச ஒழிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இந்த வழக்கு விசாரணையின்போது, சையது உசேன், இப்ராஹிம், உள்ளிட்ட நால்வர் இறந்தனர். இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி அனிதா கிறிஸ்டி, குற்றம்சாட்டப்பட்ட சர்தார் உள்ளிட்ட மூவருக்கு தலா, மூன்றாண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், இருவருக்கு இரண்டாண்டு கடுங்காவல் தண்டனையும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ