மேலும் செய்திகள்
வாலிபர் கொலையில் மூவர் கைது
29-Aug-2024
திருப்பாச்சேத்தி: சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ஆட்டோ டிரைவர் தலையில் கல்லை போட்டு கொலை செய்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.திருப்பாச்சேத்தி அருகே ஆவரங்காடு அழகுசுந்தரம் மகன் ஆட்டோ டிரைவர் பழனிமுருகன் 28. இவர் நேற்று முன்தினம் மாலை அதே ஊரை சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் மகாராஜன் 33, அமராவதி மகன் வீரசிங்கம், பழனிச்சாமி மகன் அழகுபாண்டி 43, தவமணி மகன் ரமேஷ் 31, ஆகியோருடன் மாரநாடு கண்மாயில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். அப்போது பழனிமுருகருனுக்கும், மற்ற மூவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமுற்ற மகாராஜன், பழனிமுருகன் தலையில் கல்லை போட்டு கொலை செய்து, 4 பேரும் தப்பி சென்றனர். நால்வரையும் திருப்பாச்சேத்தி போலீசார் கைது செய்தனர்.
29-Aug-2024