உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 வழிச்சாலை: அதிகாரிகள் தகவல்

திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க 4 வழிச்சாலை: அதிகாரிகள் தகவல்

திருப்புவனம்: திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்க நகர்பகுதியில் நெடுஞ்சாலைத்துறை நான்கு வழிச்சாலையாக மாற்ற முடிவு செய்துள்ளது.சிவகங்கை மாவட்டத்தில் வளர்ந்து வரும் நகரங்களில் திருப்புவனமும் ஒன்று , திருப்புவனம் நகரில் தற்போது 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.திருப்புவனத்தை சுற்றிலும் 157 கிராமங்கள் உள்ளன. மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஆனால் சாலைகள் அதே அளவு தான் உள்ளது. நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் சாலைகள் இருந்தாலும் ஆக்கிரமிப்பு காரணமாக ரோடு சுருங்கி போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.பல ஆண்டுகளாக திருப்புவனத்தில் போக்குவரத்து நெரிசல் தீராத பிரச்னையாகவே இருந்து வருகிறது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க புதிய கட்டுப்பாடு கொண்டு வந்தாலும் நிரந்தர தீர்வு காண முடியவில்லை. நெடுஞ்சாலைதுறைக்கு சொந்தமாக நகர்ப்பகுதியில் 20 மீட்டர் முதல் 26 மீட்டர் வரை சாலை இருந்தாலும் ஆக்கிரமிப்பு காரணமாக ரோடு சுருங்கி விட்டது. திருப்புவனம் மருதமரம் தொடங்கி பாப்பாங்குளம் விலக்கு வரை நான்கு கி.மீ., துாரத்திற்கு 40 கோடி ரூபாய் செலவில் நான்கு வழிச்சாலை அமைக்க நெடுஞ்சாலைத்துறை திட்டம் உருவாக்கி உள்ளது. நெடுஞ்சாலைத்துறை சாலைகள் போக மீதியுள்ள இடங்களுக்கு இடம் கையகப்படுத்தி சாலைகளை 26 மீட்டர் அகலத்திற்கு உருவாக்கி சென்டர் மீடியன் அமைக்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை