உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நிதி நிறுவனத்தில் 4.6 லட்சம் மோசடி: பணியாளர் கைது

நிதி நிறுவனத்தில் 4.6 லட்சம் மோசடி: பணியாளர் கைது

திருப்புத்துார்:திருப்புத்துார் தனியார் நிதி நிறுவனத்தில் நகைக் கடன் வசூலிப்பதில் ரூ. 4.6 லட்சம் மோசடி செய்ததாக பணியாளரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார்- - மதுரை ரோட்டில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் நகைக் கடன் தவணை வசூலிப்பவராக சிங்கம்புணரி சேவுகரெத்தினம் மகன் பத்மனாபன் 28,பணியாற்றினார். இவர் நகைக் கடன் வாங்கியவர்களிடம் தவணை வசூலித்த பணம் ரூ.4.6 லட்சம் வரை நிறுவனத்தில் கட்டவில்லை. இது குறித்து மண்டல மேலாளர் வீரபாண்டிதிருப்புத்துார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வீரபாண்டியை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி