உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடி அருகே பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு சாலை துண்டிப்பால் 50 கிராம மக்கள் தவிப்பு

காரைக்குடி அருகே பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு சாலை துண்டிப்பால் 50 கிராம மக்கள் தவிப்பு

காரைக்குடி:கனமழையால் காரைக்குடி அருகே பெரிய கொட்டகுடி ஊராட்சியில் உள்ள பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டதால் 50 கிராம மக்கள் தவிக்கின்றனர்.சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை ஒன்றியத்துக்குட்பட்ட பெரிய கொட்டகுடி ஊராட்சியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இந்த ஊராட்சியிலுள்ள கிராமங்களுக்கு புதுவயல் தேவகோட்டை ரோடு வழியாகத்தான் மக்கள் செல்ல வேண்டும். கொட்டகுடி அருகே செல்லும் பாம்பாற்றில் தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. மழை காலங்களில் தண்ணீர் செல்லும் போது மக்கள் பாதிக்கப்பட்டதால் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்ததால் ரூ. 6 கோடியில் தரைப்பாலம் இருந்த இடத்தில் புதியதாக தற்போது உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடக்கிறது. மக்கள் கிராமங்களுக்கு செல்ல குழாய் பதித்து தற்காலிக பாலம் அருகில் அமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வந்தது. தற்போது பெய்த கனமழையால் பாம்பாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்காலிக பாலம் அடித்து செல்லப்பட்டு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.ஊராட்சித் தலைவர் தனபாலன் கூறியதாவது:25 ஆண்டுக்கு பின் கனமழையால் சாலை உடைந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இரு புறங்களிலும் உள்ள 50 கிராம மக்கள் சிரமப்படுகின்றனர். வயல்களிலும், வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. பல கி.மீ., துாரம் சுற்றிச் செல்லும் நிலை உருவாகியுள்ளது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ