மேலும் செய்திகள்
கடந்தாண்டு ஆகஸ்டை விட இந்தாண்டு மழை குறைவு
09-Sep-2025
திருப்புவனம்: சிவகங்கை மாவட் டத்திலேயே திருப்புவனம் தாலுகாவில் அதிகபட்சமாக 88.4 மி.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது. வங்க கடலின் மேலடுக்கில் ஏற்பட்ட சுழற்சி காரணமாக தமிழகத்தில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை ஆறு மணிக்கு மேல் ஒரு மணி நேரம் மழை திருப்புவனம் வட்டாரத்தில் பெய்தது. காற்று இன்றி பெய்த மழை காரணமாக நகரின் பல இடங்களில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சிவகங்கை மாவட்டத்தில் அதிகபட்சமாக திருப்புவனம் வட்டாரத்தில் 88.4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது. காரைக்குடியில் 64 மி.மீ., திருப்புத்தூர் 37 மி.மீ., காளையார்கோவில் 9.6 மி.மீ., மானாமதுரை 5.6 மி.மீ., சிவகங்கை 4 மி.மீ., மழை அளவு பதிவாகியுள்ளது.
09-Sep-2025