உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மறையும் பாரம்பரிய ஊருணி

மறையும் பாரம்பரிய ஊருணி

சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே பாரம்பரிய ஊருணி சுற்றுச்சுவர், பாதுகாப்பு இல்லாமல் மறைந்து வருகிறது. இவ்வொன்றியத்தில் அ.காளாப்பூர் கிராமத்தில் 10 ஏக்கரில் பாரம்பரிய அம்மன் கோயில் ஊருணி உள்ளது. கூன் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட இந்த ஊருணி அப்பகுதி மக்களின் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்குகிறது. சில ஆண்டுகளாக இந்த ஊரணியின் தடுப்புச் சுவர் பெயர்ந்து ஊரணியை மண் மூடி வருகிறது. ஊருணியின் கழிவு நீர் கலப்பதால் இத்தண்ணீரை குடிப்பதை மக்கள் நிறுத்தி விட்டனர். ஊருணிக்கு தண்ணீர் வந்து சேரும் மடையில் பெரிய அளவில் உடைப்பு ஏற்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளது. ஊருணியின் நான்கு புறமும் பாதுகாப்பான சுற்றுச்சுவர் அமைத்து வரத்து கால்வாய்களை சீரமைப்பதுடன், தண்ணீர் வரும் மடையை கான்கிரீட் பாலத்துடன் புதிதாக அமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி