உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நுாறு நாள் பணியில் மயங்கிய பெண் தொழிலாளி

நுாறு நாள் பணியில் மயங்கிய பெண் தொழிலாளி

திருப்புவனம்: திருப்புவனம் அருகே பாப்பான்குளம் விலக்கில் 100 நாள் திட்டத்தின் கீழ் வேலை பார்த்து கொண்டிருந்த பெண் மயங்கியதை அடுத்து நெடுஞ்சாலை ரோந்து போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். கொத்தங்குளம் வரத்து கால்வாய் துார் வாரும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. கொத்தங்குளம் கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் மனைவி ராஜி 32, உட்பட பெண்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். காலை 11:00 மணியளவில் பணியின் போது ராஜி மயங்கி விழுந்தார். விஷ வண்டு கடித்ததால் மயங்கியதாக கருதி உடன் இருந்தவர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்து ரோட்டுக்கு தூக்கி வந்தனர்.அந்த வழியாக வந்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் பெண்ணை மீட்டு திருப்புவனம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக மயங்கியது தெரியவந்தது. சிகிச்சைக்குப் பின் உறவினர்கள் வீட்டிற்கு அழைத்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை