உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / நான்கு வழிச்சாலையில் பெருகும் பிளக்ஸ் பேனர்

நான்கு வழிச்சாலையில் பெருகும் பிளக்ஸ் பேனர்

மானாமதுரை: மானாமதுரை நான்கு வழிச்சாலை அருகே வாகன ஓட்டிகளின் கவனத்தை சிதறடிக்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால் விபத்து அபாயம் உள்ளது. மதுரையிலிருந்து மானாமதுரை வழியாக பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையாகவும், பரமக்குடியில் இருந்து ராமநாதபுரம் வரை இருவழிச்சாலையாகவும் 7 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டு போக்குவரத்து நடைபெற்று வருகிறது.இந்த சாலை வழியாக ராமேஸ்வரத்திற்கு ஏராளமானோர் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சென்று வருகின்றனர். மானாமதுரை தல்லாகுளம் முனீஸ்வரர் கோயில் அருகே துவங்கும் மேம்பாலத்தை ஒட்டிய பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள பிளக்ஸ் பேனர்களால் வாகன ஓட்டிகளின் கவனம் சிதறி விபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை