உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மாணவர்களுக்காக நிகழ்ச்சி

மாணவர்களுக்காக நிகழ்ச்சி

திருப்புத்துார்: தென்கரை மவுண்ட் சீயோன் சில்வர் ஜூபிலி சி.பி.எஸ்.இ.,பள்ளியில் ‛ஒளிமயமான நாளைய உலகிற்காக ஒன்றிணைவோம்’ என்ற நிகழ்ச்சியை மாணவர்களே நடத்தினர். பள்ளி அறங்காவலர் விவியன் ஜெய்சன் வரவேற்றார். தாளாளர் ஜெய்சன் கீர்த்தி ஜெயபாரதன் தலைமை வகித்தார்.பார்வையற்றோர் நடுநிலைப்பள்ளி மற்றும் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி நடந்தன. மாற்றுத்திறனாளி மாணவர்கள், முதியோர் இல்ல பயனாளிகள் மற்றும் நலத்திட்ட உதவிகளைப் பெற்ற பயனாளிகள் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். உணவுத் திருவிழாவில் சிறந்த பங்களிப்புக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முதல்வர் அர்ஷியா பாத்திமா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை