உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / மானாமதுரை கோயிலில் ஆடித்திருவிழா துவக்கம்

மானாமதுரை கோயிலில் ஆடித்திருவிழா துவக்கம்

மானாமதுரை,: மானாமதுரை ஆனந்த வல்லி, சோமநாதர் கோயிலில் நேற்று அதிகாலை அம்மனுக்கு 18 வகையான பொருட் களால் திருமஞ்சனம் நடத்தப்பட்டு அலங்காரத்தில் கோயில் முன் மண்டபத்தில் எழுந்தருளினார். தொடர்ந்து சிவாச் சாரியார்கள் காலை 9:32 மணிக்கு கொடியேற்ற பூஜைகளை துவங்கினர். 10:05 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. பின்னர் அபிஷேக, ஆராதனை, பூஜை நடைபெற்றது. விழா நாட் களின் போது சுவாமிகள் பல்வேறு வாகனங்களில் மண்டகபடிக்கு எழுந் தருளி பக்தர்களுக்கு காட்சியளிக்க உள்ளனர்.ஆடித்தபசு விழா ஆக.6ம் தேதி நடைபெற உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை