வாகன முகப்பு விளக்கால் விபத்து
இளையான்குடி: இளையான்குடி, மானாமதுரை பகுதிகளில் வாகனங்களின் முகப்புகளில் கண்ணை கூசும் அளவிற்கு விளக்குகளை எரிய விட்டு செல்வதால் சைக்கிள் மற்றும் டூவீலர்களில் செல்பவர்கள் சிரமப்படுகின்றனர். இளையான்குடி,மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ, வேன், லாரிகள் போன்ற வாகனங்களில் தற்போது புதிதாகவந்துள்ள லேசர் விளக்குகள் மற்றும் கண் கூசும் அளவிற்கு எரியும் அலங்கார விளக்குகள், சீரியல் விளக்கு என பல்வேறு விதமான விளக்குகளை வாகனங்களின் முன்புறம் எரியவிட்டு செல்வதினால் எதிரே வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.மேலும் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஹாரன்களையும் பயன்படுத்தி வருவதால் மக்கள் சிரமப்படுகின்றனர். போலீசார் இந்த வாகனங்களின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை.