ஓவர்லோடு வாகனங்களால் சிங்கம்புணரியில் ஓயாத விபத்துக்கள்
சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் ஓவர் லோடு வாகனங்களால் விபத்துக்கள் தொடர்கிறது.இப்பகுதியில் லோடு வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட உயரத்தை விட கூடுதலாக சரக்குகளை ஏற்றி செல்வது தொடர்கிறது. தற்போது அறுவடை காலம் என்பதால் வைக்கோல் கட்டுகளை அளவுக்கு அதிகமாக வாகனங்களில் ஏற்றி செல்கின்றனர். அப்படி செல்லும் போது எதிரே வரும் வாகனங்களில் வைக்கோல் உரசி விபத்து தொடர்கிறது. போலீசார் ஆங்காங்கே இவ்வாகனங்கள் மீது அபராதம் விதித்தாலும் மீண்டும் வாகனம் செல்ல அனுமதித்து விடுகிறார்கள். இதனால் அடுத்த சில பகுதிகளில் விபத்துக்கள் நடக்கிறது.எனவே ஓவர்லோடு வாகனங்களில் அபராதம் விதிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த இடத்திலேயே லோடுகளை குறைத்து ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.