மேலும் செய்திகள்
கடலாடியில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
28-Oct-2024
கீழச்சிவல்பட்டி, நவ.2--திருப்புத்துார் ஒன்றியம் அச்சரம்பட்டியில் தேவர் குருபூஜையை முன்னிட்டு நடந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 38 வண்டிகள் பங்கேற்றன.அச்சரம்பட்டி கிராமத்தார்கள், இளைஞர்கள் மற்றும் சிங்கப்பூர் வாழ் இளைஞர்களால் 33ம் ஆண்டாக நடத்தப்படும் மாட்டு வண்டி பந்தயம் அச்சரம்பட்டி - -கீரணிப்பட்டி சாலையில் ரோட்டில் நடந்தது. பெரிய மாடு, சின்ன மாடு இரு பிரிவுகளாக போட்டிகள் நடந்தன.எட்டு மைல் துாரத்திற்கான பெரிய மாடு பந்தயத்தில் 11 வண்டிகளும், 6 மைல் துாரத்திற்கான சிறியமாடு பிரிவில் 27 வண்டிகளும் என 38 வண்டிகள் பங்கேற்றன.போட்டியில் வென்ற மாட்டு வண்டிகளுக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து காளைகளுக்கு மஞ்சள் நீர் பூசி வரவேற்றனர். மாடுகளின் உரிமையாளர்களுக்கும், ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.போட்டியின் போது ரோட்டிலிருந்து விலகியதில் இருவர் மீது வண்டி மோதியதில் இருவர் காயம் அடைந்தனர்.
28-Oct-2024