உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சிவகங்கை / காரைக்குடியில் அடாவடி வசூல் வியாபாரிகள் மறியல் போராட்டம்

காரைக்குடியில் அடாவடி வசூல் வியாபாரிகள் மறியல் போராட்டம்

காரைக்குடி: காரைக்குடி கல்லுக்கட்டி,செக்காலை ரோடு,அம்மன் சன்னதி,பழைய பஸ் ஸ்டாண்ட் உட்பட பல்வேறு பகுதிகளில் தீபாவளி பண்டிகையை ஒட்டி 300க்கும் மேற்பட்ட சாலையோர கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இக்கடை வியாபாரிகளிடம் நகராட்சி நிர்ணயித்த தொகையை விட அதிக அளவில் வசூலிப்பதாகவும் ரூ.500 வரை கேட்டு மிரட்டுவதாகவும் சாலையோர வியாபாரிகள் புகார் எழுப்பினர்.இதுகுறித்து மேயர் முத்துத்துரை வியாபாரிகளை சந்தித்து நிர்ணயித்த கட்டணம் கட்டினால் போதும் என்று தெரிவித்தார்.ஆனாலும் குத்தகைக்காரர்கள், வியாபாரிகளை மிரட்டி அதிக பணம் வசூலிப்பதாக கூறி நேற்று மாலை காரைக்குடி ஐந்து விலக்கில் வியாபாரிகள் திடீர் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை நகராட்சி அதிகாரிகள் மற்றும் போலீசார் சமாதானம் செய்து அனுப்பினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ