திருக்கோஷ்டியூர் அரசு பள்ளிக்கு கூடுதல் இடம் வகை மாற்றம் செய்
திருக்கோஷ்டியூர்: திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பரிந்துரைக்கப்பட்ட கூடுதல் இடத்தை விரைவாக கல்வித்துறைக்கு வகை மாற்றம் செய்து தர வருவாய்துறை முன்வரவேண்டும். திருக்கோஷ்டியூர் அரசு உயர்நிலைப்பள்ளி 15 ஆண்டுகளுக்கு முன் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இதனால் 11,12ம் வகுப்புகள், ஆய்வகம் உள்ளிட்ட 6 வகுப்பறைகளுக்கு புதிய கட்டடம் கட்ட பொது மக்கள் கோரியிருந்தனர். அதற்காக கூடுதல் இடவசதிக்காக அருகிலிருந்து கைவிடப்பட்ட அரசு பிற் படுத்தப்பட்டோர் மாணவர் விடுதிக்கான இடத்தையும் பரிந்துரை செய்திருந்தனர். மாவட்ட நிர்வாகம் அந்த இடத்தை சிவகங்கை முதன்மை கல்வி அலுவலர் பெயருக்கு வகை மாற்ற செய்யும் பணிகளை துவக்கியது. தற்போது சென்னை நில நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் கல்வித்துறைக்கு மாற்று வதற்கான அரசாணைக்காக காத்திருக்கிறது. தற்போது கூடுதல் வகுப்பறைக்கான கட் டடம் கட்ட நிதி அனு மதியாகியுள்ளது. இதனால் விரைவாக இடம் வகை மாற்றம் செய்யப்பட்டால் கூடுதல் இடத்தில் புதிய வகுப்பறை கட்ட வாய்ப்பு ஏற்படும். இதனால் தற்போதைய பள்ளியில் இட நெருக்கடி ஏற்படாது என்பதால் விரைவாக இடத்தை வகை மாற்றம் செய்ய பொதுமக்கள் கோரியுள்ளனர்.